உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

பாரதியார்

ஒரு ராஜ கவியின் வரலாறு இங்கு மாணவர்களால் படைக்கப்பட்டிருக்கிறது...

வெள்ளி, 9 டிசம்பர், 2011

வெற்றி நிச்சயம்- பாகம்-2 -சுகி சிவம் அவர்கள்

வெற்றி மங்கை, தன்னம்பிக்கை சுடர் வில்மா ருடால்ஃப் வாழ்க்கை நமக்கு சொல்லும் பாடம் என்ன..?

உடல் ஊனத்தை வென்று சாதித்து காட்டிய அவரது வாழ்க்கையை , அவரின் தன்னம்பிக்கையை நாமும் அறிந்து அதே முனைப்போடு செயல்பட்டால் வெர்றி நிச்சயம்...

இதோ ....................
                                           வெற்றி நிச்சயம் பாகம்-2

வியாழன், 8 டிசம்பர், 2011

வெற்றி நிச்சயம்- சுகி சிவம் அவர்கள்

சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள் வெற்றி நிச்சயம் என்ற தலைப்பில் பேசிய ஒலி வட்டு ஒன்று திரு.பிரபாகர் (www.abiprabhu.blogspot.com) அவர்களிடம் இருந்து பெற்றிருக்கிறோம்..

திரு.பிரபாகர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் தன்னம்பிக்கை உரை சிறு, சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு தொடராக வெளியிடலாம் என முடிவு செய்திருக்கிறோம். இதோ அதன் முதல் பகுதி.
   

                                         வெற்றி நிச்சயம்- பகுதி-1
                                    

திங்கள், 5 டிசம்பர், 2011

மரங்களைப் பாடுவேன்...!!!- கவிப் பேரரசு வைரமுத்து.


மரங்களின் மகத்துவத்தை கவிப் பேரரசு
தனது குரலில் செய்த பதிவு இதோ..!

மரங்களைப் பாடுவேன்...!

வியாழன், 1 டிசம்பர், 2011

நன்றி..!!

திரு.மா.சீனிவாசன்
பள்ளியின் இந்த வலைப்பூவில் இன்னும் பல அம்சங்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என எங்களுக்கு வாழ்த்துக்களும், அறிவுரையும் வழங்கி உதவிய எடப்பாடி வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் திரு.மா.சீனிவாசன் அவர்களுக்கு நன்றி..!

அவரது கருத்துக்கள் படி இனி தகவல்கள், தன்னம்பிக்கைப் பேச்சுக்கள் அடங்கிய ஆடியோக்களையும் வெளியிட உள்ளோம்.

வாசகர்களாகிய தங்களிடம் ஒருவேளை அப்படிப்பட்ட ஆடியோக்கள் இருக்குமேயானால் எங்களின் பள்ளி மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.. முகவரி: pumssivagangaipuram@gmail.com ... நன்றி..! 

அம்மா- கவிப்பேரரசு வைரமுத்து

vairamuthu


வைரமுத்து குரலில்  “அம்மா”   கவிதை... ஆடியோ பைல்களை பிளாக்கில் இணைக்க வழி தெரியாததால் வேறு தளத்திற்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.    யாருக்கேனும் மார்க்கம் தெரியும் எனில் தயவுசெய்து தெரிவியுங்கள்...! நன்றி..!

ஞாயிறு, 27 நவம்பர், 2011

செவ்வாய், 25 அக்டோபர், 2011

ஆட்சியரை ஆன்லைனில் அணுக.. -கூ.அன்பு (கணித ஆசிரியர்)


          பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இரண்டற கலந்த ஒன்று. உண்மையிலேயே மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக பொது மக்களின் குறை தீர்ப்பு என்பது ஒரு மாவட்ட நிர்வாகத்தின் திறமையான செயல்பாடுகளை அளந்து நிர்வாகத்தை மேம்படுத்தும் ஒரு செயலாக கருதப்படுகிறது. 

             அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு பள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வும் எளிதாகிறது.


           மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து கண்காணிக்கிறது. கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.
               
      இப்படி அனைத்து வகைப் பிரச்சனைகளுக்கும் மாவட்ட ஆட்சியர் வழியான தீர்வுகளுக்கு தமிழக அரசு இணையத்தில் தனித் தளம் துவங்கி  மாவட்ட ஆட்சியரை மக்கள் ஆன்லைனில் சந்தித்து பிரச்சனைகளை தெரிவிக்க ஆவணம் செய்துள்ள்து...

அதற்கான தளம் செல்ல இங்கே சொடுக்குங்கள்..

      தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களை இணையத்தில் இணைத்திருக்கிறார்கள்.. பிரச்சனையுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

புதன், 28 செப்டம்பர், 2011

தாமஸ் ஆல்வா எடிசன்


தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஒரு ஆவணப் படமாக இங்கு தந்து  இருக்கிறோம்.. சிங்கப்பூர்  வானொலி ஒன்றின் ஒலிக்  காட்சிகளைப் பயன்படுத்தி படைக்கப்பட்டிருக்கிறது இப்படம் ....  

வியாழன், 22 செப்டம்பர், 2011

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

செப்டம்பர் 16 - சர்வதேச ஓசோன் தினம்


ஓசோனை காக்க உங்களாலும் முடியும்!
                                                       - பானுமதி அருணாசலம் (விகடனில்..)
செப்.16,2011

சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை ஃபில்டர் செய்து பூமிக்கு ஒளியை அனுப்பும் பணியை செய்து வருவது ஓசோன் படலம். இந்த ஓசோன் படலம் சமீபகாலமாக சேதமடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.

மனிதனின் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பினால் ஓசோன் படலம் சிதலமடைந்து வருவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என 1970-ம் வருடங்களில் விஞ்ஞானிகள் எச்சரிக்கைமணி அடித்தனர். இதனை அடுத்து 1985-ம் வருடத்தில் வியன்னாவில் உலக நாடுகள் ஒன்றிணைந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் விஷயங்களை ஆராய்ந்தது.

அதன்பிறகு  1995-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக அனுசரிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.


பூமியிலிருந்து சுமார் 10 முதல் 50 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஓசோன் படலம். இந்தப் படலம் இருப்பதினால் தான் சூரிய ஒளி நேரடியாக பூமிக்கு வருவதில்லை. ஆனால், சமீபகாலமாக ரெஃபிரிட்ஜிரேட்டரிலிருந்து வெளியாகும் குளோரோஃப்ளோரோ கார்பன் மற்றும் உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைட் போன்றவைகளால் ஓசோன் படலம் வெகுவாக பாதிப்புள்ளாகிறது.

அன்டார்டிக்கா மற்றும் ஆர்டிக் பகுதிகளில் இருக்கும் ஓசோன் படலத்தில் அதிகளவில் ஓட்டைகள் இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது. இதனால் பனி மலைகள் அதிகளவில் உருகும் எனவும், இந்தியாவிலும் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என நாசா எச்சரித்திருக்கிறது.

தோல் வியாதிகள், பார்வை இழப்பு மற்றும் பயிர்களை பாதிக்கிறது புற ஊதாக் கதிர்கள். ஒரு குளோரோஃப்ளோரோ கார்பன் மூலக்கூறினால் ஒரு மில்லியன் ஓசோன் மூலக்கூறை அழிக்கிறது. 2000-மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 29.9 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு ஓட்டை இருந்ததாகவும், 2010-ல் 22.2 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த அளவுக்கு ஓசோனின் ஓட்டை சரியானதற்கு காரணம், உலகம் முழுவதும் இந்தப் படலத்தை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தான்.

இன்றையச் சூழ்நிலையில் ரெஃபிரிட்ஜிரேட்டர், .சி. போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டதால் முழுவதும் தடைசெய்ய முடியாது. எனினும், தேவைக்கு மேல் பயன்படுத்தாமல் மிக மிக அவசியம் என்றால் மட்டுமே இந்தப் பொருட்களை உபயோகிக்கலாமே.

குளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்கள் .சி., ஃபிரிட்ஜ் போன்றவற்றை தவிர்த்து, நம்மால் முடிந்தளவுக்கு ஓசான் படலத்தை பாதுகாப்போம்.

வருங்கால சந்ததியினருக்கு நல்ல பூமியை விட்டுச் செல்வோம்!