உங்களின் கருத்துக்களை உள்வாங்கி, அதன் அடிப்படையில் புதிய வடிவமைப்புக் கொண்டு விரைவில் உங்களின் வரவேற்பறையில் வலம் வருவோம்... மாணவர்கள் தயாரித்து அளிக்கும் ஆவணப்படங்கள் வெகு விரைவில்... செய்திதாள்கள் கூட வராத எங்கள் ஊர் தற்போது எவ்வாறு உள்ளது..?.....விரைவில்...!! 10 மற்றும் 12-ஆம் வகுப்பு ரிசல்ட் இனி நமது தளத்திலும் காணலாம்... அனைத்து வகுப்பு பாட புத்தகங்களையும் இங்கே தரவிரக்கம் செய்யுங்கள்...

வியாழன், 20 அக்டோபர், 2011

முதலாம் ஆண்டின் முடிவல்ல.. இரண்டாம் ஆண்டின் துவக்கம்...!!


இன்று எங்கள் வலைப்பூ இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..!

சிறுவர்கள் கையாளும் தளம்தான் என உதரிவிடாமல் எங்களின் இந்த சிறிய முயற்சியைக் கூட ஊக்குவிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி..!!

சென்ற மாதத்தில் மட்டும் எங்களை கண்டு சென்றவர்கள் பற்றிய தகவல் இது.. காலாண்டுத் தேர்வுகள் மற்றும் அதன் விடுமுறையினாலும், ஆசிரியர்களின் தேர்தல் பணிகளாலும் எங்களால் கடந்த ஒரு மாத காலத்தில் இணையத்தில் போதுமான கவனம் செலுத்த இயலவில்லை..

நாங்கள் வெளியிட்டிருக்கும் மின் இதழ்களை நூற்றுக்கும் மேற்பட்டோர் தரவிரக்கம் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தீபாவளிக்கு பிறகு புதிய உத்வேகத்தோடு நாங்கள் செயல்படுவோம்.. நல்ல பல செய்திகளை படிப்போம்... சேகரிப்போம்.. பகிர்ந்து கொள்ளுவோம்..!!

பல பேர் கருத்துரையிலும்,  மின் அஞ்சல் வழியாகவும் ஊக்குவிக்கும் நிகழ்வு எப்போதும் தொடர விரும்புகிறோம்..!
நன்றி..!! அனைவருக்கும்..!!

2 கருத்துகள்:

VenusMurugesan சொன்னது…

உங்கள் தளம் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.


.....அதிக போக்குவரத்து வசதிகூட கிடைக்காத ஒரு கடைகோடி கிராம மாணவர்களின் கடின முயற்சியே இத்தளம்......


மேற்கண்ட வரிகளை மட்டும் எடுத்துடுங்க பாஸ்.
அனைத்திலும் கேடானது கழிவிரக்கம்

thedavuranbu சொன்னது…

திரு.முருகேசன்.. உங்கள் கருத்துகளுக்கு நன்றி..!! எங்களை தாழ்த்தி(உங்க பாணியில் கழிவிரக்கம்) வரும் அனுதாப நோக்கில் எழுதப்பட்ட வரிகள் அல்ல அவைகள்.. அறிவுத் தேடலுக்கும், ஆக்கத்திறனுக்கும் வசிக்கும் இடம் மட்டுமே ஒருகாரணம் அல்ல என படிப்போர் உணரட்டும் என்ற நோக்கிலேயே பதிவிடப்பட்டுள்ளது.. ஒருவேளை அது சிலருக்கு நம்பிக்கையை மேம்படுத்தக்கூடும் என்ற சிந்தை வெளிப்பாடே அவ்வரிகள்.. நன்றி..!!!
-கூ.அன்பு(பள்ளி கணித ஆசிரியர்)

கருத்துரையிடுக